டில்லியில் நவராத்திரி சண்டிஹோமம்
ADDED :4490 days ago
புதுடில்லி: புதுடில்லி, ஸ்ரீதேவி காமாட்சியம்மன் கோயிலில் நவராத்திரியை ஒட்டி நாளை நவசண்டிஹோமம் நடக்கிறது. காஞ்சி காமகோடி பீடம் ஜகத்குரு சங்கரச்சாரிய சுவாமிகள் ஆசியுடன் நடக்கும் இந்த நிகழ்ச்சியில், காலை7.30க்கு ஸ்ரீதேவி மகாத்மிய பாராயணம், 8.30க்கு ஏகாதச ருத்ர ஹோமம், பகல் 12க்கு பூர்ணாஹூதி, வசோதர ஹோமம், 12.30க்கு கலசாபிஷேகம் செய்யப்படும். பின், தங்க அங்கியால் அம்பாளை அலங்கரித்து தீபாராதனை நடக்கும்.