லட்சுமி நரசிங்கப் பெருமாள் கோவிலில் பக்தர்களுக்கு அன்னதானம்
ADDED :4377 days ago
அவிநாசி: தாளக்கரை ஸ்ரீலட்சுமி நரசிங்கப் பெருமாள் கோவிலில், புரட்டாசி மாத சனிக்கிழமையை முன்னிட்டு, அதிகாலை 5.00 மணிக்கு திருமஞ்சனம், அபிஷேகம் நடந்தது. 6.00 மணிக்கு சிறப்பு அலங்காரத்தில் பெருமாள் அருள்பாலித்தார். மாலை கருட வாகனத்தில் பிரகார உலா நடந்தது. பங்கேற்ற பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. கருவலூர் ஊராட்சி தலைவர் அவிநாசியப்பன் துவக்கி வைத்தார். முருகசாமி, மதியழகன், சுப்ரமணி யம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.