சப்தகன்னிமார் கோயிலில் மழை வேண்டி பொங்கல்
ADDED :4377 days ago
சோழவந்தான்: சோழவந்தான் அருகே தென்கரை எட்டூர் கிராமத்தினர் சப்தகன்னிமார் கோயிலில் மழைவேண்டி பொங்கலிட்டு பூஜை செய்தனர். சிறப்பு யாகம் நடந்தது. கிருஷ்ணமூர்த்தி, வேம்புவெங்கட்ராமன் சாஸ்திரிகள் பூஜைகளை நடத்தினர். தென்கரை விவசாய சங்க நிர்வாகிகள், பொதுப்பணித்துறை பொறியாளர் போஸ்முருகன், அலுவலர்கள் மணிகண்டன், பாண்டி, சிவக்குமார், ராயப்பன், சேது பங்கேற்றனர்.