உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஜெபமாலை மாதா ஆலய தேர் பவனி

ஜெபமாலை மாதா ஆலய தேர் பவனி

தஞ்சாவூர்: தஞ்சை ஜெபமாலைபுரத்தில் தூய ஜெபமாலை மாதா ஆலய திருவிழா வெகு விமரிசையாக நடந்தது. இதனையொட்டி, கடந்த, 4ம் தேதி அன்னையின் உருவம் பொறித்த கொடி, புனித செபஸ்தியார் ஆலயத்தில் இருந்து பவனியாக எடுத்து வரப்பட்டது. பின் தஞ்சை மறைமாவட்ட ஆயர் தேவஸ்தாஸ் அம்புரோஸ் புனிதம் செய்து, அன்னை கொடியை ஏற்றி வைத்தார். வடக்குவாசல் பங்குத்தந்தை ஜெரால்டு, உதவி பங்குத்தந்தை பரிசுத்தராஜ் ஆகியோர் இணைந்து, கூட்டுப்பாடல் திருப்பலி செய்தனர். இதைத்தொடர்ந்து, முக்கிய நிகழ்ச்சியாக ஜெபமாலை மாதா தேர்பவனி விமர்சையாக நடந்தது. இதில் கிறிஸ்தவர்கள் திரளாக பங்கேற்று வழிபட்டனர். விழாவில் தஞ்சை தொகுதி எம்.எல்.ஏ., ரங்கசாமி, நிலவள வங்கித்தலைவர் துரைவீரணன், ஒன்றிய கவுன்சிலர் வெங்கடேசன், மேலவெளி பஞ்., தலைவர் முரளிதரன் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !