நவராத்திரி நிறைவு விழாவில் குதிரை வாகனத்தில் பெருமாள்
ADDED :4376 days ago
காஞ்சிபுரம்: நவராத்திரி நிறைவு விழாவான, விஜயதசமியன்று, காஞ்சிபுரம் வரத ராஜபெருமாள் தங்க குதிரை வாகனத்தில் மாட வீதிகளில் வலம் வந்தார். காஞ்சிபுரம் வரதராஜபெருமாள் கோவிலில், நவராத்திரி விழா நிறைவு நாளில் வரதராஜபெருமாள் ராஜ அலங்காரத்தில், தங்க குதிரை வாகனத்தில் நான்கு மாடவீதிகளில் வலம் வந்தார். இரவு 8:00 மணியளவில் கோவில் வளாகத்தில் உள்ள வன்னி மரத்தில் பெருமாள் அம்பு எய்து, பார் வேட்டை உற்சவத்துடன் விழா நிறைவு பெற்றது.