நவராத்திரி விழாவின் நிறைவு நாள் கொண்டாட்டம்
ஊத்துக்கோட்டை: சுருட்டப்பள்ளி, தாராட்சி ஆகிய கிராமங்களில் உள்ள சிவாலயங்களில், உற்சவர் அம்மன், நவராத்திரி விழாவின் நிறைவு நாள், கொண்டாடப்பட்டது. ஊத்துக்கோட்டை அடுத்த, சுருட்டப்பள்ளி பள்ளிகொண்டேஸ்வரர் கோவிலில், நவராத்தி விழா கடந்த, 5ம் தேதி துவங்கியது. தினமும் மாலை, 5:00 மணிக்கு இவ்விழா துவங்கும் விழாவில், லலிதாசகஸ்ர நாம அர்ச்சனை நடைபெறும். நவராத்தி விழாவின் நிறைவு நாளான, நேற்று முன்தினம் மாலை, உற்சவர், மகிஷாசூரமர்த்தினி அலங்காரத்தில் அருள்பாலித்தார். தாராட்சி பரதீஸ்வரர் கோவிலில், மூலவர் பரதீஸ்வரர், அன்னை லோகாம்பிகை ஆகிய தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது. தொடர்ந்து ஹோமம் வளர்த்து, சிறப்பு பூஜைகள் நடந்தன. நிறைவு நாளான நேற்று முன்தினம், மகிஷாசூரமர்த்தினி அலங்காரம் செய்யப்பட்டது. தீபாராதனை முடிந்து, உற்சவர், கிராமத்தில் உள்ள முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.