உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிவன் கோவில்களில் அக்., 18ல் அன்னாபிஷேகம்

சிவன் கோவில்களில் அக்., 18ல் அன்னாபிஷேகம்

ராசிபுரம்: ராசிபுரம் கைலாசநாதர் மற்றும் அலவாய்மலை சித்தேஸ்வரர் கோவில்களில், அக்டோபர், 18ம் தேதி, அன்னாபிஷேகம் நடக்கிறது. ஐப்பசி மாத பவுணர்மி திதியை முன்னிட்டு, ராசிபுரம் கைலாசநாதர் கோவிலில் அக்டோபர், 18ம் தேதி, அன்னாபிஷேகம் நடக்கிறது. ராசிபுரம் தர்மசம்வர்த்தினி அம்பாள் உடனுறை கைலாசநாதர் ஸ்வாமிக்கு, அபிஷேக ஆராதனைகள் நடக்கிறது. தொடர்ந்து, மாலை, 6 மணிக்கு, கைலாசநாதர் ஸ்வாமி அன்னத்தால் அலங்கரிக்கப்பட்டு, பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். அதற்கான ஏற்பாடுகளை, அன்னாபிஷேக கட்டளைதாரர் சுரேஷ்குமார் குடும்பத்தினர் செய்து வருகின்றனர். * அதேபோல் அலவாய்மலை சித்தேஸ்வரர் ஸ்வாமிக்கு, அன்னாபிஷேகம் நடக்கிறது. காலை, 9 மணிக்கு மேல் விநாயகர் பூஜையுடன் துவங்கி, சண்முகர், நவக்ககிரகம் உள்ளிட்ட பரிவார மூர்த்திகளுக்கு அபிஷேக ஆராதனை நடக்கிறது. தொடர்ந்து, சித்தேஸ்வரர் ஸ்வாமி அன்னத்தால் அலங்கரிக்கப்பட்டு, பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !