உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திசையன்விளை சந்தியம்மன் கோயிலில் பரிவேட்டை

திசையன்விளை சந்தியம்மன் கோயிலில் பரிவேட்டை

திசையன்விளை: திசையன்விளை சந்தியம்மன் கோயில் தசரா விழாவில் பரிவேட்டை நடந்தது. திசையன்விளை சந்தியம்மன் கோயில் தசரா திருவிழா 10 நாட்கள் நடந்தது. விழாவில் முதலாவது நாளில் கணபதி ஹோமம், யாகபூஜை, கும்பாபிஷேகம் ஆகியவையும், அதனை தொடர்ந்து அம்மன் கொலு உற்சவம் நடந்தது. தினசரி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. அம்பாள் ராஜராஜேஸ்வரி, நடராஜர், மகிஷாசூரமர்த்தினி, மகாலட்சுமி, பகவதி, அன்னபூரணி, துர்க்கை, ஆண்டாள், சரஸ்வதி என பல்வேறு முக அலங்காரங்களுடன் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். விழாவின் நிறைவு நாளான விஜயதசமி அன்று காலையில் திருமஞ்சனகுட ஊர்வலம், மதியம் சிறப்பு அபிஷேக அலங்கார பூஜை, மாலையில் அம்பாள் பூச்சப்பரத்தில் எழுந்தருளி நகரின் முக்கிய வீதிகள் வழியாக பரிவேட்டைக்கு எழுந்தருளினார், பின் நெடுவிளை வாகையடி இசக்கியம்மன் கோயில் அருகே வன்னிகுத்து வைபவம் நடந்தது. இரவு அலங்கார சப்பரபவனி நடந்தது. விழாவில் தையம் கலை நிகழ்ச்சி நடந்தது, ஏராளமான பக்தர்கள் வேடமனிந்தும், தீச்சட்டி ஏந்தியும், அலகு குத்தியும் தங்கள் நேர்த்தி கடன்களை செலுத்தினர், ஏற்பாடுகளை சைவ வேளாளர் சங்க தலைவர் திருவம்பலம் தலைமையில் சைவவேளாளர் சங்க சமுதாய வரிதாரர்கள் மற்றும் இளைஞரணியினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !