உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காரமடை அரங்கநாதர் கோவிலில் அம்பு போடும் விழா!

காரமடை அரங்கநாதர் கோவிலில் அம்பு போடும் விழா!

மேட்டுப்பாளையம்: காரமடை அரங்கநாதர் கோவிலில் அம்பு போடும் விழா நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். காரமடையில் அரங்கநாதர் மற்றும் லோகநாயகி உடனமர் நஞ்சுண்டேஸ்வரர் கோவில் உள்ளது. இரண்டு கோவில்களிலும் நவராத்திரி விழா விமரிசையாக கொண்டாடப்பட்டது. கடைசிநாள் இரவு, அம்பு போடும் விழா நடந்தது. அரங்கநாத பெரு மாள் வெள்ளைக்குதிரை மீது அமர்ந்து, தெற்கு, மேற்கு ரத வீதிகள் வழியாக, பரிவேட்டை மைதானத்தில் எழுந்தருளினார். அதேபோன்று, லோகநாயகி உடனமர் நஞ்சுண்டேஸ்வரர் சுவாமியும், உலா வந்து, பரிவேட்டை மைதானத்தில் எழுந்தருளினர். மைதானத்தில் உள்ள வன்னிமரத்துக்கு சிறப்பு பூஜையும், அபிஷேகமும் செய்யப்பட்டது. அதை தொடர்ந்து வன்னி மரத்தின் மீது அம்பு போடும் நிகழ்ச்சி நடந்தது. விழாவில் அரங்கநாத பெரு மாளும், நஞ்சுண்டேஸ்வரரும் ஒரே இடத்திலிருந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !