மதுரையில் பக்ரீத் சிறப்புத் தொழுகை
ADDED :4374 days ago
மதுரை: மதுரையில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு நடந்த சிறப்புத் தொழுகைகளில் ஏராளமானோர் பங்கேற்றனர்.மதுரை காளவாசல் ஈத்கா பள்ளிவாசல் மைதானத்தில் அரசு டவுன் தலைமை ஹாஜி மீர் முகமூதுல் காதிரி தலைமையில் சிறப்புத் தொழுகை நடந்தது. இதில் ஏராளமான முஸ்லிம்கள் பங்கேற்றனர். ஒருவரை ஒருவர் கட்டித்தழுவி வாழ்த்துகளை தெரிவித்தனர். பல்வேறு பள்ளிவாசல்களிலும் சிறப்பு தொழுகைகள் நடந்தன. ஏழைகளுக்கு நல உதவிகளையும் வழங்கினர்.சோழவந்தான் நைனார் தொழுகை பள்ளிவாசலில் முஸ்லிம்கள் சிறப்பு தொழுகை செய்தனர். நகர் முஸ்லிம் ஜமாத் கமிட்டி தலைவர் ஹாஜிஅபுபக்கர் தலைமையில் ஏராளமானோர் பங்கேற்றனர்.