பூஜாரிகளுக்கு ஆலய வழிப்பாட்டு பயிற்சி
ADDED :4488 days ago
மதுரை: கிராம ஏழை பூஜாரிகளுக்கு ஆலய வழிபாட்டு இலவச பயிற்சி முகாம் நடத்த, அகில இந்திய கிராம கோயில் பூஜாரிகள் பேரவை முடிவு செய்துள்ளது. மதுரை மாவட்ட ஆலோசனை கூட்டம் நிர்வாக அறங்காவலர் சவுந்தரராஜன் தலைமையில் நடந்தது. மாவட்ட அமைப்பாளர் கண்ணன் பட்டாச்சாரியார் வரவேற்றார். மாநில இணை அமைப்பாளர் சோமசுந்தரம் பேசினார்.கிராம ஏழை பூஜாரிகளுக்கு ஆலய வழிபாட்டு பயிற்சி முகாம் நடத்துதல், தியான சுலோகம் மற்றும் அலங்கார அபிஷேக முறைகள் தமிழ் மற்றும் சமஸ்கிருத மொழிகளில் தெளிவாகவும், விரிவாகவும், இலவசமாக கற்றுத்தருவது, பயிற்சி முடிவில் சான்றிதழ் வழங்குவது, என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நகர அமைப்பாளர் ஜெயகாந்தி நன்றி கூறினார்.