உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / இளையான்குடி பள்ளிவாசல்களில் பக்ரீத் சிறப்பு தொழுகை!

இளையான்குடி பள்ளிவாசல்களில் பக்ரீத் சிறப்பு தொழுகை!

இளையான்குடி: இளையான்குடி பள்ளிவாசல்களில் நேற்று பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு தொழுகை நடந்தது. மேலப்பள்ளி வாசல், ஐ.என்.பி.டி.பள்ளிவாசல், சாலையூர் ஷாபி பள்ளிவாசல்,ஹனபி பள்ளி வாசல், இக்ரா மெட்ரிக்குலேசன் பள்ளி திடலில் ஏ.ஐ.எம்.டிரஸ்ட், அல் இஹ்னான் டிரஸ்ட் , த.மு.மு.க., சார்பில் சிறப்பு தொழுகை நடந்தது. இதே போல் புதூர் பெரிய பள்ளி வாசல், கீழாயூர் பள்ளி வாசல், சாத்தனி பள்ளி வாசல், விசவனூர் பள்ளி வாசல், திருவள்ளூர், சோதுகுடி, சாலைக்கிராமம் பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகைகள் நடந்தன. இளையான்குடியில் நேற்று காலை 8 மணி முதல் 9 மணி வரை மின் தடை ஏற்பட்டது.பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு மின் தடை ஏற்படாமல், மின் விநியோகம் வழங்க வேண்டும் என மின் வாரியத்திற்கு வேண்டுகோள் கடிதம் கொடுத்தும், தொழுகை நேரமான காலை 8 மணி முதல் 9 மணி வரை மின் தடை ஏற்பட்டது. மின் வாரியத்தில் கேட்டதற்கு சரியான பதில் இல்லை எனக் கூறி மனித நேய மக்கள் கட்சியினர் , த.மு.மு.க., வினர், பொது மக்கள் கண்மாய்கரையில் காலை 9 மணி முதல் 9.30 மணி வரை பஸ் மறியல் செய்தனர். திருப்புத்தூர் அச்சுக்கட்டு ஈத்கா மைதானத்தில் பக்ரீத் சிறப்புத் தொழுகை நடந்தது. தென்மாப்பட்டு பள்ளிவாசல், சமஸ்கான்பள்ளிவாசல்,அச்சுக்கட்டு பள்ளிவாசல், புதுப்பட்டி பள்ளிவாசல், மஸ்ஜிதூன் நூர் பள்ளிவாசல்களிலிருந்து உலமாக்கள் தலைமையில், ஜமாத்தார்கள் முன்னிலையில் இஸ்லாமியர்கள், திருப்புத்தூர் பெரியபள்ளிவாசல் வந்தனர். அங்கிருந்து, மாவட்ட அரசு டவுன் ஹாஜி,முகமது பாரூக் ஆலீம் தலைமையில் ஈத்கா மைதானம்சென்றனர். அங்கு நடந்த பக்ரீத் சிறப்புத் தொழுகையில் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !