சிவன் கோவில்களில் அன்னாபிஷேகம்
ADDED :4377 days ago
வாலாஜாபாத்: காஞ்சிபுரம் மாவட்ட சிவன் கோவில்களில், நாளை அன்னாபிஷேகம் நடைபெற உள்ளது.காஞ்சிபுரம் மாவட்டத்தில், 1,192 சிவன் கோவில்கள் உள்ளன. இக்கோவில்களில், ஐப்பசி மாதம் வரும் பவுர்ணமி நாளில் அன்னாபிஷேகம் நடைபெறும். இந்த ஆண்டு, ஐப்பசி மாதம் பவுர்ணமி மாத துவக்க நாளில் வருவதால், நாளை 18ம் தேதி அனைத்து சிவன் கோவில்களிலும், அந்தந்த கோவில் நிர்வாகத்திற்கு ஏற்றவாறு அன்னாபிஷேகம் நடைபெற உள்ளது.