உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிதம்பரம் காமாட்சியம்மன் கோவிலை அரசு ஏற்றது!

சிதம்பரம் காமாட்சியம்மன் கோவிலை அரசு ஏற்றது!

சிதம்பரம்: சிதம்பரம் காமாட்சியம்மன் கோவிலை அரசு ஏற்றதற்கான உத்தரவு கோவிலில் ஒட்டப்பட்டது. சிதம்பரம் மந்தக்கரையில் உள்ள காமாட்சியம்மன் கோவில் சம்பந்தமாக இரு பிரிவினரிடையே ஏற்பட்ட பிரச்னை காரணமாக அறங்காவலர் நியமனம் செய்வது குறித்த வழக்கு கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்நிலையில், இந்து அறநிலையத்துறை உத்தரவுப்படி கோவிலை அரசு ஏற்றது. கோவிலின் நலன் கருதி நேற்று விழுப்புரம் இணை ஆணையர் உத்தரவுப்படி கோவிலில் அதற்கான ஆணை ஒட்டப்பட்டது. தொடர்ந்து தில்லைக்காளி கோவில் செயல் அலுவலர் முருகன் நேற்று இக்கோவிலின் தக்காராக சுயமாக பொறுப்பேற்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !