லலிதா செல்வாம்பிகைக்கு காய்கனி அலங்காரம்
ADDED :4709 days ago
செஞ்சி : செல்லபிராட்டி லலிதா செல்வாம்பிகைக்கு ஐப்பசி மாத பவுர்ணமியை முன்னிட்டு காய்கனி அலங்காரம் செய்தனர். விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த செல்லபிராட்டி லலிதா செல்வாம்பிகை கோவிலில் ஐப்பசி மாத பவுர்ணமி விழா அக் 18 நடந்தது. இதை முன்னிட்டு காலை 7.00மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்தனர். காய்கனிகளால் அலங்காரம் செய்து, பகல் 12.00 மணிக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது. இரவு 8.00 மணிக்கு விசேஷ திரவிய அபிஷேகம், சகஸ்ர நாம அர்ச்சனை, இரவு 10.00 மணிக்கு மகா புஷ்பாஞ்சலி நடந்தது. அறங்காவலர் கன்னியப்பன் மற்றும் விழா குழுவினர், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். பூஜைகளை ஈஸ்வர சிவன் செய்தார்.