மூர்த்திக்குப்பம் கோவில் கும்பாபிஷேகம்
ADDED :4427 days ago
கிருமாம்பாக்கம் : மூர்த்திக்குப்பம் பாலவிநாயகர் கோவில் கும்பாபிஷேகம் அக் 18 நடந்தது. கும்பாபிஷேகத்தையொட்டி, அக் 17 காலை 9:00 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், தன பூஜை, கோ பூஜையும், இரவு 10:00 மணிக்கு எந்திர ஸ்தாபன அஷ்டபந்தன மருந்து சாத்துதல், அக் 18 காலை 5:30 மணிக்கு விநாயகர் பூஜை, இரண்டாம் கால பூஜை நடந்தது. காலை 9:00 மணிக்கு பாலவிநாயகர், வள்ளி தெய்வானை சமேத சுப்ரமணியர், பாலமுருகர், வித்யாசரஸ்வதி மகாலட்சுமி சுவாமிகளுக்கு கும்பாபிஷேம் நடந்தது. விழாவில், அமைச்சர் தியாகராஜன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள், பொதுக்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை முன்னாள் கவுன்சிலர் ஜெயபால், முன்னாள் பஞ்சாயத்து தலைவர் அரிதாஸ் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.