உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / புதுச்சேரி வேதபுரீஸ்வரர் கோவிலில் அன்னாபிஷேகம்

புதுச்சேரி வேதபுரீஸ்வரர் கோவிலில் அன்னாபிஷேகம்

புதுச்சேரி: வேதபுரீஸ்வரர் கோவிலில் அன்னாபிஷேகம் நடந்தது. காந்தி வீதியில் உள்ள வேதபுரீஸ்வரர் கோவிலில் அன்னாபிஷேக விழா கடந்த 18 ம்தேதி விக்னேஸ்வர பூஜையுடன் துவங்கியது. இரண்டாம் நாளான நேற்று முன்தினம் காலை 11.30 மணிக்கு வேதபுரீஸ்வரர்,திரிபுர சுந்தரிக்கு மகா அபிஷேகம் நடந்தது. மாலை 3:00 மணிக்கு அன்னம் சார்த்தல், 6:00 மணிக்கு அன்னாபிஷேக அலங்காரம் நடந்தது. 8:30 மணிக்கு அன்னம் களையப்பட்டு, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கபட்டது. கோவில் தனி அதிகாரி ஸ்ரீநிவாசன், நிர்வா அதிகாரி தனஞ்செயன் உட்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !