மேலையூரில் 37ம் ஆண்டு கோவில் விழா
ADDED :4374 days ago
திருப்போரூர்: மேலையூர் படவட்டம்மன் கோவிலில், தீ மிதி விழா நடந்தது. திருப்போரூர் அடுத்த நந்தபாக்கம் படவட்டம்மன் கோவிலில், 37ம் ஆண்டு கோவில் விழா நடந்தது. தீமிதி விழா கடந்த 18ம் தேதி நடந்தது. அன்றைய தினம் காலை, பால்குட அபிஷேகமும், பகலில் மகா அபிஷேகமும், மாலையில் பக்தர்கள் பூச்சட்டி ஏந்தி, தீ மிதித்தனர். இரவு 7:00 மணியளவில் பறந்து வந்து அம்மனுக்கு மாலை அணிவித்தல் நிகழ்ச்சி நடந்தது. இரவு, 10:00 மணிக்கு, தெருக்கூத்து நாடகமும் நடந்தன. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகி பாலசுப்ரமணியன் தலைமையில் விழா கமிட்டியினர் செய்து இருந்தனர்.