உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சின்னமனூர் சிவகாமியம்மனுக்கு அன்னாபிஷேகம்

சின்னமனூர் சிவகாமியம்மனுக்கு அன்னாபிஷேகம்

சின்னமனூர் : சின்னமனூர் சிவகாமியம்மன் உடனுறை பூலாநந்தீஸ்வரர் கோயிலில் அன்னாபிஷேக விழா நடந்தது. சுவாமிக்கும் அம்மனுக்கும் விஷேச அபிஷேகம் மற்றும் அன்னத்தினால் விஷேச அலங்காரம் செய்ப்பட்டது. பின்னர் சிறப்ப பூஜைகளும் அபிஷேகமும் நடந்தது. அலங்கரிக்கப்பட்ட அன்னம் மங்கள வாத்தியங்களுடன் சுரபி ஆற்றில் கரைக்கும் நிகழ்ச்சி நடந்தது. மீண்டும் அம்மனுக்கும் சுவாமிக்கும் விஷேச அலங்காரம் செய்யப்பட்டு அபிஷேகம், தீபாராதனை நடத்தப்பட்டது. அம்மனும் சுவாமியும் அன்னாபிஷேக சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். ஏற்பாடுகளை அன்னாபிஷேக கட்டளை தாரர் துர்க்கா வஜ்ரவேல் குடும்பத்தினர் செய்திருந்தனர். தக்கார் சுரேஷ், நிர்வாக அதிகாரி ரம்ய சுபாஷினி கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !