உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் ஆணையர் ஆய்வு

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் ஆணையர் ஆய்வு

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலுக்கு ஞாயிற்றுக்கிழமை சென்னையில் இருந்து இந்து சமய அறநிலையத் துறையின் கூடுதல் ஆணையர் த.ராஜா திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலுக்கு வந்தார். கோயில் கோசாலையை ஆய்வு செய்த அவர், அங்கு உள்ள பசுக்கள் மற்றும் கன்றுகளைப் பராமரிக்க கூடுதல் பணியாளர்களை உடனே நியமிக்க வேண்டும். குறைந்தபட்சம் 5 பணியாளர்களையாவது புதிதாக நியமிக்க வேண்டும். பசுக்களுக்குத் தேவையான தீவனம் மற்றும் வைக்கோல், பசுந்தாள் ஆகியவற்றை தேவைக்கு அதிகமாகவே இருப்பு வைக்க வேண்டும். பசுக்கள் மற்றும் கன்றுக்குட்டிகளை முறையாகப் பராமரிக்க வேண்டும் என்று கோயில் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !