சின்னதிருப்பதி பிரசன்ன வெங்கட்ரமண சுவாமி கோயில் தேரோட்டம்
ADDED :4370 days ago
காருவள்ளியில் மலைமேல் உள்ள பிரசன்ன வெங்கட்ரமண சுவாமி திருக்கோயிலில் புரட்டாசி மாதம் நான்கு சனிக்கிழமைகளிலும் சிறப்பு பூஜை மற்றும் அபிஷேகங்கள் நடைபெற்றன. 5-ஆவது சனிக்கிழமை தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இதையொட்டி, சுதர்சன ஹோமம் நடத்தப்பட்டு, சுவாமி ரதம் ஏறுதலும்,தேரோட்டமும் நடைபெற்றது.