செல்லாண்டியம்மன் கோவிலில் புரட்டாசி பொங்கல் விழா
ADDED :4368 days ago
உசிலம்பட்டி: எழுமலை பகுதியில் சூலப்புரம் கிராமம் உள்ளது. இந்த ஊர் மற்றும் உலைபட்டி, குன்னுவார்பட்டி, செல்லாயிபுரம் கிராம மக்கள் விவசாயத்தையே செய்து வந்தனர். கிராம மக்கள் மற்ற பண்டிகைகளை விட புரட்டாசி பொங்கல் பண்டிகையையே தலையாய விழாவாக கொண்டாடுகின்றனர். அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா 3 நாட்கள் நடந்தன. இதனையொட்டி திருப்பூர் உள்பட வெளியூர்களில் வசிக்கும் பக்தர்கள் ஒரு வாரத்துக்கு முன்பே சொந்த ஊருக்கு வந்து விட்டனர். புரட்டாசி பொங்கலையொட்டி சூலப்புரம் உள்பட 4 ஊர்களுமே விழாக்கோலம் பூண்டன.