நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு அபிசேகம்
ADDED :4368 days ago
நாமக்கல் நகரின் மைய பகுதியில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இங்கு ஒரே கல்லில் செதுக்கப் பட்ட 18 அடி உயர ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். இந்த கோவிலில் தினமும் அபிசேகம் மற்றும் பூஜைகள் நடந்து வருகின்றன. இருப்பினும் தமிழ் மாத முதல் ஞாயிற்றுக்கிழமைகளில் கோவில் நிர்வாகம் சார்பில் சுவாமிக்கு சிறப்பு அபிசேகம் மற்றும் பூஜைகள் செய்வது வழக்கம். வழக்கம்போல் நேற்று ஐப்பசி மாத முதல் ஞாயிற்றுக் கிழமையை முன்னிட்டு சிறப்பு அபிசேகம் மற்றும் பூஜைகள் நடத்தப்பட்டது.