சிதம்பரம் திருக்காமக்கோட்டம் கோயிலில் ஐப்பசி பூர உற்சவம்
ADDED :4472 days ago
சிதம்பரம் நடராஜர் கோயில் சிவகங்கை மேற்குக் கரையில் அமைந்துள்ள திருக்காமக்கோட்டம் என்ற சிவகாமி அம்மன் கோயிலில் ஐப்பசி பூர உற்சவம் திங்கள்கிழமை இரவு கொடியேற்றத்துடன் தொடங்கி பத்து நாள்கள் நடைபெற உள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் ஐப்பசி பூர உற்சவம் சிவகாமசுந்தரி அம்மனுக்கு நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு ஐப்பசி பூர உற்சவம் அக்டோபர் 21ஆம் தேதி திங்கள்கிழமை இரவு 8-00 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.