திருச்செந்தூர் அகத்தியர் கோவிலில் பெüர்ணமி பூஜை
ADDED :4704 days ago
திருச்செந்தூர் சன்னிதித் தெருவிலுள்ள அகத்தியர் கோவிலில் வெள்ளிக்கிழமை இரவு அகத்திய பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து அகத்தியர் நாம வழிபாடு, தீபவழிபாடு, திருமுறை பாராயணம் மற்றும் மகேஸ்வர பூஜை நடைபெற்றன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.