கரிசூழ்ந்தமங்கலம் பெருமாள் கோயிலில் ஐப்பசி விசு வழிபாடு
ADDED :4370 days ago
பத்தமடை: கரிசூழ்ந்தமங்கலம் வெங்கடாஜலபதி பெருமாள் கோயிலில் ஐப்பசி விசு சிறப்பு பூஜை நடந்தது.பத்தமடை அருகேயுள்ள கரிசூழ்ந்தமங்கலம் வெங்கடாஜலபதி பெருமாள் கோயிலில் ஐப்பசி மாதப் பிறப்பு அன்று கோயிலில் மூலவரான சக்கரத்தாழ்வாருக்கு அபிஷேகம், அலங்காரம் தீபாராதனை நடந்தது. மதியம் 12 மணிக்கு சிறப்பு அலங்கார தீபாராதனை நடந்தது. மாலை 5 மணிக்கு கருட வாகனத்தில் பெருமாள் வீதியுலா நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.ஏற்பாடுகளை கரிசூழ்ந்தமங்கலம் பெருமாள் கோயில் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.