சபரிமலையில் அன்னதானம்: ஐயப்ப சேவா சங்கம் அழைப்பு
ஈரோடு: சபரிமலையில் அன்னதானம் செய்ய, சேவை செய்ய விரும்புவோர் அகில பாரத ஐயப்ப சேவா சங்கத்தை அணுகலாம், என்று அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. சபரிமலையில் மண்டல, மகர விளக்கு காலங்களில் தினமும் அகில பாரத ஐயப்ப சேவா சங்கம் சார்பில் அன்னதானம் நடக்கிறது. இந்தாண்டும் அன்னதானம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. சபரிமலையில் அன்னதானம் செய்ய விரும்பும் பொதுமக்கள், ஐயப்ப பக்தர்கள், தனியார் நிறுவனங்கள், உப்பு, மஞ்சள், அரிசி, பருப்பு, எண்ணெய், மளிகை பொருட்கள், தாமரை இலை, சமையல் பாத்திரங்களை பொருளாகவோ, பணமாகவோ கொடுக்கலாம்.சபரிமலையில் பக்தர்களுக்கு சுக்கு தண்ணீர் வழங்குதல், முதலுதவி, நெரிசலில் சிக்கும் பக்தர்களுக்கு அவசர சிகிச்சை உதவி, பக்தர்களை வரிசைப்படுத்தும் பணி, அன்னதானம் வழங்குதல் போன்ற சேவை செய்ய விரும்பும் பக்தர்கள், பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் ஆகியோர், தன்னார்வ தொண்டர்களாக மண்டல, மகர விளக்கு காலங்களில் சேவை செய்யும் தொண்டர்களுக்கு தங்க இடமும், உணவும் இலவசமாக வழங்கப்படும்.மண்டல பூஜைக்கு, நான்கு குழுமங்களும், மகர விளக்குக்கு, இரண்டு குழுமமும் அனுப்பபடும். சேவை செய்ய நவம்பர், 14, 24, டிசம்பர், 4, 14, 29, ஜனவரி, 9 ஆகிய தேதிகளில், இக்குழுமம் புறப்படும். தொடர்ந்து, 10 நாட்கள் சேவை செய்ய வேண்டும். சேவை செய்ய, அன்னதானத்துக்கு உதவ விரும்புவோர், "ரங்கசாமி, 9443670031, சிங்காரவேலு 9345652851, டாக்டர் அய்யப்பன் 8973405331, சாரங்கபாணி 9443498022 என்ற எண்களிலோ அல்லது ஈரோடு மாவட்ட அகில பாரத ஐயப்ப சேவா சங்கத்தையோ தொடர்பு கொள்ளலாம்.