பெருமாள் கோவிலுக்கு மின் இணைப்பு கலெக்டரிடம் கோரிக்கை!
ADDED :4370 days ago
விழுப்புரம்: நன்னாடு சீனிவாசப் பெருமாள் கோவிலுக்கு மின் இணைப்பு வழங்க கோரி, கலெக்டரிடம் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது. விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைகேட்பு முகாமில் நன்னாடு கிராம நாட்டாண்மை தட்சிணாமூர்த்தி நேற்று கொடுத்த மனு: விழுப்புரம் அடுத்த நன்னாடு கிராமத்தில் சீனிவாச பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு மின் இணைப்பு வழங்க கோரி, மின்வாரிய அலுவலகத்தில் பலமுறை விண்ணப்பம் தரப்பட்டது. மின் இணைப்பு வழங்க இது வரை நடவடிக்கை எடுக்கவில்லை. கிராமத்திலுள்ள கோவிலுக்கு உடனடியாக மின் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு தட்சிணாமூர்த்தி தனது கோரிக்கை மனுவில் தெரிவித்துள்ளார்.