காஞ்சி குமரக்கோட்டம் கோவிலில் கிருத்திகை விழா கோலாகலம்!
ADDED :4420 days ago
காஞ்சிபுரம்: குமரக்கோட்டம் சுப்பிரமணியசுவாமி கோவிலில் ஐப்பசி கிருத்திகையையொட்டி நாக சுப்பிரமணியர் வள்ளி தெய்வானையுடன் ராஜவீதிகளை வலம் வந்தார். காஞ்சிபுரம் குமரக்கோட்டம் சுப்பிரமணியசுவாமி கோவில் கந்தபுராணம் அரங்கேறிய தலமாகும். அருணகிரி நாதர் பாடல் பெற்ற தலமாகவும் விளங்கி வருகிறது.வழக்கமாக வரும் மாத கிருத்திகையில் சுப்பிரமணியசுவாமி உற்சவர்தான் வீதியுலா செல்வார். ஆண்டுக்கு ஒரு முறை ஐப்பசி மாதத்தில் வரும் கிருத்திகையில் நாக சுப்பிரமணியர் வள்ளி தெய்வானையுடன் வீதியுலா செல்வார். அதன்படி நேற்று முன்தினம் காலையில் அவருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் வரிசையில் நின்று சுவாமியை தரிசனம் செய்தனர். மாலையில் மலர் அலங்காரத்தில் வள்ளி தெய்வானையுடன் நான்கு ராஜவீதிகளை வலம் வந்தார்.