பழனி மலைக்கோயிலில் படிக்கடைகள் அகற்றம்
ADDED :4472 days ago
பழனி: மலைக் கோயிலுக்கு படிவழிப் பாதை, யானைப் பாதை ஆகியன பக்தர்கள் பயன்பாட்டில் உள்ளன. படிக் கடைகளில் இறைச்சி, மது போன்றவற்றின் புழக்கம் உள்ளதாகவும் தொடர்ந்து புகார்கள் எழுந்து வந்தன. இதையடுத்து எழுந்த பல்வேறு புகார்களைத் தொடர்ந்து, மலைக் கோயில் படிவழிப் பாதையில் உள்ள கடைகளை, திண்டுக்கல் இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் உதவியுடன், திருக்கோயில் நிர்வாகம் இன்று அகற்றுவதாகத் தெரிவித்துள்ளது.