உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஏழுமலையானின் ஸ்ரீவாரி பாதங்கள் பக்தர்களின் பார்வைக்காக திறப்பு

ஏழுமலையானின் ஸ்ரீவாரி பாதங்கள் பக்தர்களின் பார்வைக்காக திறப்பு

திருமலையில் ஏழுமலையான் முதன் முதலில் பாதம் பதித்த இடமான ஸ்ரீவாரி பாதங்கள் இடத்தில் தேவஸ்தானம் பாதங்களை ஏற்படுத்தி பூஜை செய்து வந்தது. ஆனால் கடந்த மாதம் கோயிலுக்கு வந்த பக்தர்கள் பாதத்தின் மீது தேங்காய் உடைத்ததால் பாதங்கள் சேதமடைந்தன. அதனால் தேவஸ்தானம் அதை அகற்றி புதிய பாதங்கள் பொருத்தியது. இந்த நிலையில் பாதுகாப்பு காரணங்களால் தேவஸ்தானம் பாதங்களைப் பார்வையிட மீண்டும் அனுமதியை ரத்து செய்தது. இதைத் தொடர்ந்து இன்று முதல் பாதம் உள்ள பகுதிக்குச் செல்ல அனுமதி வழங்கப்படும் என தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !