உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / செல்லாண்டியம்மன் கோவில் தேர்த்திருவிழா துவக்கம்

செல்லாண்டியம்மன் கோவில் தேர்த்திருவிழா துவக்கம்

ராசிபுரம்: நித்திய சுமங்கலி மாரியம்மன் மற்றும் செல்லாண்டியம்மன் கோவில் தேர்த் திருவிழா, நேற்று, பூச்சாட்டுதலுடன் துவங்கியது.ராசிபுரம் கைலாசநாதர் கோவிலில் இருந்து, மாரியம்மன் ஸ்வாமி உற்சவர் சப்பாரத்தில், முக்கிய வீதிகள் வழியாக கொண்டு வரப்பட்டு, செல்லாண்டியம்மன், பட்டத்துளசி அம்மன் கோவில்களுக்கு சென்று, மாரியம்மன் கோவிலில் பூச்சாட்டு நடத்தப்பட்டது.அப்போது, பக்தர்கள், தாங்கள் கொண்டு வந்த பூக்களை, ஸ்வாமி மீது தூவினர். தொடர்ந்து, இன்று (அக்., 24) இரவு, 8 மணிக்கு, கம்பம் நடும் விழா நடக்கிறது. கட்டளைதாரர்களின் சார்பில் ஸ்வாமி, வாகனத்தில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.நவம்பர், 4ம் தேதி இரவு, பூவோடு பற்ற வைத்தல், மறுநாள் அதிகாலை, பூவோடு எடுத்தல், அன்று இரவு, 8 மணிக்கு கோவிலில் கொடியேற்று விழா நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !