இசக்கி அம்மன் கோயிலில் மகா அபிஷேகம்
ADDED :4467 days ago
பேய்க்குளம்: பேய்க்குளம் அருகே விராக்குளம் இசக்கி அம்மன் கோயிலில் மகாஅபிஷேகம் நடந்தது.மகா அபிஷேகத்தை முன்னிட்டு முந்தைய நாள் இரவு வாஸ்து பூஜை, பாலிகா பூஜை, எஜமான சங்கல்பம், பிரவேதபலி, சுவாமி கடஸ்தாபனம், திக்கு பூஜை, தீபாராதனை நடந்தது. மறுநாள் காலை கணபதி ஹோமம், வேத பாராயணம், நவக் கிரக ஹோமம், பிரத்யங்கிர ஹோமம், இசக்கி அம்மன், பேச்சி அம்மன் மற்றும் பரிவார தேவதைகளுக்கும் கும்பாபிஷேகம், மகா அபிஷேகம் நடந்தது. பின்னர் தீபாராதனையை தொடர்ந்து பிரசாதம் வழங்குதல் நடந்தது. ஏற்பாடுகளை கோயில் கமிட்டியினர் செய்தனர்.