உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உச்சினிமாகாளி கோயிலில் 108 திருவிளக்கு பூஜை

உச்சினிமாகாளி கோயிலில் 108 திருவிளக்கு பூஜை

பேய்க்குளம்: பேய்க்குளம் அருகே உச்சினிமாகாளி அம்மன் கோயிலில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு 108 திருவிளக்கு பூஜை நடந்தது.பேய்க்குளம் அருகே தெற்கு பேய்க்குளம் உச்சினிமா காளி அம்மன் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு காலை 5 மணிக்கு கணபதி ஹோமம் நடந்தது. நண்பகல் கும்பாபிஷேகம் நடந்தது. பின்னர் விசேஷ அலங்கார தீபாராதனை நடந்தது. இரவு ஆர்.எஸ்.எஸ் சார்பில் 108 திருவிளக்கு பூஜை நடந்தது. இதில் சுற்றுவட்டார கிராம பெண்கள் கலந்து கொண்டு திருவிளக்கேற்றி அம்மனைப்பாடி வழிபட்டனர். பின்னர் பிரசாதம் ஏற்பாடுகளை ராஜசேகரன், சங்கரன், ஆதிநாராயணன் உட்பட கோயில் கமிட்டியினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !