விநாயகர் கோவிலில் மண்டலாபிஷேகம்!
ADDED :4395 days ago
திருத்தணி: திருத்தணி - அரக்கோணம் சாலையில், முக்கண் விநாயகர் கோவில் உள்ளது. இக்கோவிலில், 10 லட்சம் ரூபாய் செலவில், திருப்பணிகள் நடத்தி, கடந்த மாதம், 9ம் தேதி கும்பாபிஷேகம் நடந்தது. பின்னர், தினமும் காலை, மாலை மூலவருக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. 48வது நாளை முன்னிட்டு, நேற்று காலை மண்டலாபிஷேக விழா நடந்தது. விழாவை ஓட்டி, கோவில் வளாகத்தில் யாகசாலை அமைத்து கணபதி ஹோமம் நடந்தது. காலை, 10:00 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. இதில், நுாற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.