குறுக்குத்துறை முருகன் கோயிலில் கந்தசஷ்டி விழா நவ. 3ல் துவக்கம்
ADDED :4465 days ago
திருநெல்வேலி: நெல்லை குறுக்குத்துறை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்தசஷ்டி விழா நவம்பர் 3ல் துவங்குகிறது. திருவாவடுதுறை ஆதீனத்துக்கு சொந்தமான குறுக்குத் துறை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆண்டுதோறும் கந்தசஷ்டி திருவிழா கோலாகலமாக நடக்கும். இந்த ஆண்டு திருவிழா நவம்பர் 3ல் துவங்குகிறது. 3ம் தேதி முதல் 8ம் தேதி வரை தினமும் காலையில் யாக சாலை பூஜை, அபிஷேகம், அலங்காரம், சிறப்பு தீபாராதனை, மாலையில் சுவாமி வீதியுலா நடக்கிறது. 8ம் தேதி மாலை 4.30 மணிக்கு மேல் சூரசம்ஹாரம் நடக்கிறது. 9ம் தேதி காலை 10.30 மணிக்கு மேல் சி.என். கிராமத்தில் தபசுக்காட்சி, இரவு 7 மணிக்கு கோயிலில் சுவாமி, அம்பாள் திருக்கல்யாணம் நடக்கிறது.