உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மதுரை மாரியம்மன் தெப்பக்குளத்தை அழகுபடுத்துதல் நிறுத்தம்!

மதுரை மாரியம்மன் தெப்பக்குளத்தை அழகுபடுத்துதல் நிறுத்தம்!

மதுரை: மதுரை மாரியம்மன் தெப்பக்குளத்தை, முதல்தர பொழுதுபோக்கு இடமாக மாற்றுவதற்காக, அதனை அழகுபடுத்தும் பணிகள் பாதியிலே நிறுத்தப்பட்டுள்ளதால், சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். கடந்த ஆட்சியில், மதுரையில் சுற்றுலாத் தலங்களை மேம்படுத்துவதற்காக, சுற்றுலாத் துறை சார்பில் "மெகா டூரிசம் திட்டத்தில், ரூ.12.55 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில், பல இடங்களில் பணிகள் முடிந்துள்ளன. ஆனால், மாரியம்மன் தெப்பக்குளம் ரூ.2.75 கோடியில் அழகுபடுத்தும் பணிகள் இன்னும் நிறைவடையவில்லை. தெப்பக்குளம் - ராமேஸ்வரம் ரோடு தவிர, மற்ற மூன்று ரோடுகளில் கான்கிரீட்டும், குளத்தின் சுற்றுச்சுவரையொட்டி நடைபாதை மற்றும் புல்வெளிகள், இருக்கைகள், அலங்கார விளக்குகள், நீரூற்றுகள், இந்த நிதியில் அமைக்க திட்டமிடப்பட்டன. ஏற்கனவே, எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியின்கீழ், நடைபாதை, அலங்கார விளக்குகள், சுற்றிலும் புல்வெளி அமைத்தது வீணானது. தற்போது, நிதி ஒதுக்கீடு செய்து 3 ஆண்டுகளை கடந்தும் பணியை றைவேறவில்லை. "மெகா டூரிசம் திட்டத்தில், திருப்பரங்குன்றம் பூங்கா அழகுபடுத்தும் பணி நிறைவடைந்து, பொழுதுபோக்கு இடமாக மாறியுள்ளது. இங்கு செயற்கை நீரூற்று நடனம் உட்பட பல பொழுதுபோக்கு அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. இதற்கு நிகராக, தெப்பக்குளத்தை சுற்றி பூங்கா அமைக்க முடிவு செய்யப்பட்டிருந்தது. ஒரே திட்டத்தில், நிதி ஒதுக்கீட்டிற்கு அறிவிப்பு செய்யப்பட்ட, மேலவாசல் பூங்கா, மீனாட்சி அம்மன் கோவில் பூங்கா, திருமலை நாயக்கர் மகால் பூங்கா, திருப்பரங்குன்றம் பூங்கா, தெப்பக்குளம் பூங்காக்களின் பணிகள் நிறைவடைந்து ஒரே நாளில் திறக்க சுற்றுலாத்துறை திட்டமிட்டிருந்தது. ஆனால் தெப்பக்குளம் பூங்காவின் பணிகள் இழு... இழு... என இழுத்துக் கொண்டு வருகிறது. நடைபாதை, புல்தரை அமைக்க கம்பிகள் அமைக்கும் பணிகள் துவங்கிய போது, தெப்பத்திருவிழா வந்தது. அப்போது தேர்வடம் இழுக்கப்பட்ட போது அவை பிடுங்கப்பட்டன. பின், அவ்விழாவின்போது கழட்டும் வகையில் தடுப்பு கம்பிகள் அமைக்கப்படும், என தெரிவிக்கப்பட்டது. ஆனால் , இதுவரை இப்பணி நடைபெறவில்லை. சுற்றுலாத்துறை நிதிஒதுக்கீடு செய்தாலும், இப்பணியை மாநகராட்சி தான் அழகுபடுத்தும் பணிகளை செய்தது. பாதியில் நிறுத்தப்பட்டுள்ள பணிகளை மீண்டும் துவங்கி, தெப்பக்குளத்தை அழகுபடுத்தும் பணியை மாநகராட்சி மீண்டும் துவக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !