ஆண்டாள் கோயில் திருமுக்குளம்: ரூ.90 லட்சத்தில் செப்பனிட முடிவு!
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் திருமுக்குளத்தை ஆழப்படுத்தி, சீர் படுத்த, 90 லட்சத்தில் செப்பனிட முடிவு செய்யப்பட்டுள்ளது. ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் திருமுக்குளத்திற்கு, மொட்டபத்தான் கண்மாயிலிருந்து, சங்கூருணி வழியாக தண்ணீர் வருகிறது. நாளடைவில் இக்குளத்திற்கு தண்ணீர் வரும் கால்வாயிகளில், வீடுகளின் கழவுநீரும் சேர்ந்து வந்தது. தண்ணீர் மாசு பட்டதால், ஆண்டாளுக்கு அபிஷேகம் செய்ய, இந்த தண்ணீர் எடுப்பது நிறுத்தப்பட்டது. கடந்தாண்டு சரிவர மழை பெய்யாததால், திருமுக்குளத்தில் தண்ணீர் இல்லாமல், தெப்ப விழாவும் நடக்கவில்லை. தனியார் நிறுவனத்தின் மூலம், மொட்டபத்தான் கண்மாயிலிருந்து போர் வெல் போட்டு, அங்கிருந்து குழாய்கள் பதித்து, திருமுக்குளத்திற்கு தண்ணீர் கொண்டு வரவும், குளத்தை சுற்றி சுற்று சுவர் கட்டி, அதன் கம்பி வேலி அமைத்தும், குளத்தை சுற்றி வண்ண விளக்குகள், நடை பாதை பூங்கா அமைப்பது உள்ளிட்ட பணிகளுக்கு, 90 லட்ச ரூபாய் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. ஆனால் இன்று வரை, இதற்கான பணிகள் நடக்கவில்லை. தற்போது தண்ணீர் இல்லாத நிலையில், இதற்கான பணியை விரைவில் துவக்க பக்தர்கள் விரும்புகின்றனர். செயல் அலுவலர் சுப்பிரமணியன்,"" இப்பணிக்கான திட்ட வரைவு, அரசின் அனுமதிக்காக அனுப்பபட உள்ளது. அனுமதி கிடைத்ததும் பணிகள் துவக்கப்படும், என்றார்.