கடவுள் படைத்தது சாதிக்கத் தான் ராமகிருஷ்ண மடத்தின் சுவாமி பேச்சு!
ADDED :4399 days ago
திருவெண்ணெய்நல்லூர்: திருவெண்ணெய்நல்லூரில் விவேகானந்தரின் சிலை திறப்பு மற்றும் ரத யாத்திரை விழா நடந்தது. இதில் சென்னை ராமகிருஷ்ண மடத்தின் சுவாமி விமூர்த்தானந்தமகராஜ் பேசியதாவது: ஒவ்வொருவரையும் கடவுள் படைத்தது சாதிப்பதற்குத் தான். விவேகானந்தரும் அவ்வாறு படைக்கப்பட்டவர். இவரது பொன்மொழிகளை மாணவ, மாணவியர் கடைபிடித்தால் வாழ்வில் முன்னேறலாம். எல்லோரிடமும் அளவற்ற சக்தி உள்ளது. இதனை முறையாக பயன்படுத்திட வேண்டும். இங்கு விவேகானந்தரின் சிலை திறப்பதன் மூலம் நம்நிலை மேம்படுவதுடன் அன்பு, தைரியம், சக்தி உருவாகியுள்ளது.ஜாதி, மத, இன வேறுபாடின்றி பாரம்பரிய வரலாற்றை எடுத்துக் கூறியவர் விவேகானந்தர். இவரது வழியில் சென்றால் வாழ்வில் உயரலாம். இவ்வாறு அவர் பேசினார்.