திருவெண்ணெய்நல்லூரில் விவேகானந்தர் சிலை திறப்பு!
திருவெண்ணெய்நல்லூர்: திருவெண்ணெய்நல்லூரில் விவேகானந்தரின் சிலை திறப்பு விழா, ரதயாத்திரை நடந்தது. சுவாமி ஹரிவிரதானந்தர் தலைமை தாங்கினார். காலை 11:30 மணிக்கு காந்தி நினைவு மேல் நிலைப் பள்ளிக்கு வந்த ரதயாத்திரைக்கு பள்ளியின் இயக்குனர் கோபாலசுந்தரம் தலைமையில் பூர்ண கும்ப மரியாதை செலுத்தப்பட்டது. மாணவ, மாணவியர் உறுதிமொழி ஏற்று விவே கானந்தரை வழிபட்டனர். வாத்தியங்கள் முழங்க ரதயாத்திரை புறப்பட்டது. போன்நேரு மேல்நிலைப்பள்ளியில் தாளா ளர் வாசுதேவன், மரதகவிநாயகர் கோவில் அருகில் கூட்டுறவு கடன் சங்க தலைவர் சரவணக்குமார், பேரூராட்சி தலைவர் வெற்றிவேலன், அண்ணா சிலை அருகில் முன்னாள் தலைவர்கள் வைத்திய நாதன், சந்திராரகு மற்றும் வணிகர் சங்கம் சார்பிலும், தெத்து பிள்ளையயார் கோவில் அருகில் இந்து முன்னணி ஏழுமலை சார்பிலும் புஷ்பாஞ்சலி செலுத்தப்பட்டது. மதியம் 1:05 மணிக்கு விவேகானந்தரின் சிலையை சென்னை ராமகிருஷ்ண மடத்தின் சுவாமி விமூர்த்தானந்தமகராஜ் திறந்து வைத்து பேசினார். அரசு கலைக்கல்லூரி முதல்வர் தங்கதுரை தலைமையில் மாணவ, மாணவியர் புஷ்பாஞ்சலி செலுத்தினர். மதியம் 1:35 மணிக்கு மாடவீதிகளின் வழியே ரதயாத்திரை சென்றது. பெண்கள் கற்பூரம் ஏற்றி விவேகானந்தரை வழிப்பட்டனர். மதியம் 3 மணிக்கு புறப்பட்டு அரசூர், இருவேல்பட்டு வழியாக விழுப்புரத்திற்கு சென்றது.ஏற்பாடுகளை அன்பரசன், செல்வகணேசன், கோகுலவர்மன், சரவணன், அன்புச்செல்வம், சண்முகானந்தம் மற்றும் மக்கள் செய்திருந்தனர்.