விவேகானந்தர் ரத உற்சவத்திற்கு சிறப்பான வரவேற்பு!
உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை பகுதிகளிலுள்ள கல்வி நிறுவனங்களில் நடந்த ரத உற்சவத்திற்கு மாணவர்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர். விவேகானந்தரின் 150 வது ஜெயந்தி விழாவையொட்டி சுவாமி விவேகானந்தர் சிறப்பு ரதம் 27ம் தேதி உளுந்தூர்பேட்டை வந்தது. ரத உற்சவத்திற்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. நேற்று கல்வி நிறுவனங்களில் ரத உற்சவம் புறப்பட்டது. திருநாவலூர் அரசு மேல்நிலைப் பள்ளி, வேதாந்தா பொறியியல் கல்லூரி, ஸ்ரீவிநாயகா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, உளுந்தூர்பேட்டை, பாலி, ஆசனூர், எலவனாசூர்கோட்டை, மங்கலம்பேட்டை அரசு பள்ளிகள், ஐவதுகுடி ஸ்ரீஐயப்பா பாலிடெக்னிக் கல்லூரி, ராமகிருஷ்ணா குருகுலம், ஸ்ரீசாரதா கல்வி நிலையங்கள், அரசு ஐ.டி.ஐ., எலவனாசூர்கோட்டை விநாயகா மெட்ரிக் பள்ளிகளில் ரத உற்சவம் நடந்தது. ரத உற்சவத்திற்கு கல்வி நிறுவன நிர்வாகிகளான விநாயகா கல்லூரி நமச்சிவாயம், வேதாந்தா கல்லூரி கணேசன், ஐயப்பா கல்லூரி சந்திரசேகரன், ராஜேந்திரன் உட்பட பலர் சிறப்பான வரவேற்பு அளித்தனர். புல்லூர், பள்ளியந்தாங்கல் கிராமங்களிலும் ரத உற்சவம் நடந்தது. கிராம மக்கள் சார்பாக சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.