சைவசித்தாந்த வகுப்பு விண்ணப்பம் வரவேற்பு!
ADDED :4399 days ago
கோவை: திருவாவடுதுறை ஆதீனத்தின் சார்பில் சைவசித்தாந்த நேர்முகப் பயிற்சி வகுப்பு வரும் 2014 ஜனவரியில் துவங்குகிறது; மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. இரு ஆண்டுகளுக்கு மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமையில், பேரூர் ஆதீன கிளை மடத்தில் இப்பயிற்சி வகுப்புகள் நடக்கின்றன. பயிற்சி நிறைவில் "சித்தாந்த ரத்தினம் எனும் விருது உரிய முறையில் வழங்கப்படுகிறது. தமிழ் எழுத படிக்கத் தெரிந்த ஆண், பெண் இருபாலரும் ஜாதி, மத வேறுபாடின்றி வகுப்பில் சேரலாம்; கல்வித் தகுதி, வயது, வரம்பு கிடையாது. மாணவர்கள் சேர்க்கை துவங்கிவிட்ட நிலையில், விண்ணப்ப படிவம் தகவலோடு பெறுவதற்கு, கோவை மைய அமைப்பாளர், பாண்டுரெங்கன் இல்லம், 78/79 ராமானுஜ நகர், கோவை 641015 என்ற முகவரியிலும், 98422 85649 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.