பதினாறும் பெற 16 வார தீபம்!
ADDED :4366 days ago
ஜாதகத்தில் ராகுதோஷம் இருந்தால் திருமணத்தடை, கணவன்- மனைவி இடையே பிரச்னை ஏற்பட வாய்ப்புண்டு. இதனைப் போக்க துர்க்கைக்கு வளர்பிறை அஷ்டமி திதி, செவ்வாய் அல்லது வெள்ளிக்கிழமைகளில் பூஜை செய்வது நன்மையளிக்கும். இதற்காக விரதமிருக்கும் நாளில், பகலில் எதுவும் சாப்பிடாமல், ராகு காலத்தில் துர்க்கை பூஜை செய்ய வேண்டும். இரவில் எளிய உணவு சாப்பிடலாம். விரதம் இருக்க முடியாதவர்களும், கோயிலுக்குச் செல்ல முடியாத நிலையில் உள்ளவர்களும், வீட்டில் திருவிளக்கின் முன், இரண்டு வெள்ளி விளக்குகள் அல்லது அகல் விளக்குகள் ஏற்றி இந்த வழிபாட்டை செய்யலாம். 16 வாரங்கள், ராகு காலத்தில், தொடர்ந்து தீபமிட, திருமணத்தடையும், தம்பதியரிடையே கருத்துவேறுபாடும் நீங்கும். குழந்தைப்பேறு கிடைக்கும். பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழலாம்.