தருமபுரி மாவட்டத்தில் கோயில் பாதுகாப்புப் பணிக்கு: விண்ணப்பங்கள் வரவேற்பு
தருமபுரி மாவட்டத்தில் அன்னசாகரம் சுப்பிரமணியசாமி கோயில், தருமபுரி கோட்டை ஸ்ரீ மல்லிகார்ஜின சுவாமி கோயில், புலிகரை குந்தியம்மன் கோயில், அரூர் வேடியப்பன் கோயில், மருதப்பட்டி ஸ்ரீ சென்றாயப் பெருமாள் மற்றும் சென்னகேசவப் பெருமாள் கோயில், தென்கரைக்கோட்டை ஸ்ரீ கல்யாணராமன் நஞ்சுண்டேஸ்வரர் கோயில், பென்னாகரம் கொடிஹள்ளி வீரபத்திர சுவாமி கோயில், மணியம்பாடி ஸ்ரீ வெங்கடராம சுவாமி கோயில் ஆகிய கோயில்களில் பாதுகாப்புப் பணிக்கு முன்னாள் படைவீரர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு மாதம் ரூ.5 ஆயிரம் மதிப்பூதியம் வழங்கப்படும். 62 வயது வரை பணிபுரியலாம். எனவே, இக்கோயில்களுக்கு அருகாமையிலுள்ள முன்னாள் படை வீரர்கள், எச்.49, காளியப்பா நிவாஸ், பழைய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, ஒட்டப்பட்டி, தருமபுரி என்ற முகவரியில் உள்ள முன்னாள் படை வீரர் நல அலுவலகத்திற்கு தொடர்பு கொண்டு விண்ணப்பிக்கலாம்.