உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / லாஸ்பேட்டை கோவிலில் சூரசம்ஹார விழா துவக்கம்

லாஸ்பேட்டை கோவிலில் சூரசம்ஹார விழா துவக்கம்

புதுச்சேரி: சிவசுப்ரமணிய சுவாமி கோவிலில், கந்த சஷ்டி சூரசம்ஹார பெருவிழா துவங்கியது. லாஸ்பேட்டையில், பிரசித்திப் பெற்ற, சிவசுப்ரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. இங்கு, 10 நாள் சூரசம்ஹார பெருவிழா, விக்னேஸ்வர பூஜையுடன் நேற்று துவங்கியது. அதையொட்டி, மாலை கொடியேற்றப்பட்டது. தொடர்ந்து, சுவாமி வீதியுலா நடந்தது. ஆறாம் நாள் திருவிழாவான, 8ம் தேதி, பல்லாக்கு கம்பம் நடுதல், மாலை 4:00 மணிக்கு சூரபத்மன் புறப்பாடு, இரவு 7:00மணிக்கு, முத்து ரதத்தில் சுவாமி புறப்பாடு நடக்கிறது. இதைதொடர்ந்து, சூரசம்ஹார பெருவிழாவும், மயில் வாகனத்தில் சுவாமி வீதியுலாவும் இரவில் நடக்கிறது.வரும் 9ம் தேதியன்று, மாலை 6:00 மணிக்கு, பெண் அழைப்பு, 8:00 மணிக்கு, திருக்கல்யாண உற்சவம், முத்து பல்லக்கு, மறுநாள் 11ம் தேதியன்று, ஊஞ்சல் உற்சவம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை, அறங்காவலர் குழுவினர், நட்டாண்மை, தேவஸ்தான அர்ச்சகர்கள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !