உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கேதார கவுரி விரதம் சிதம்பரத்தில் சிறப்பு வழிபாடு

கேதார கவுரி விரதம் சிதம்பரத்தில் சிறப்பு வழிபாடு

சிதம்பரம்: கேதார கவுரி நோன்பையொட்டி கீழத்தெரு மாரியம்மன் கோவிலில் சுமங்கலி பெண்கள் சிறப்பு பூஜை செய்து அம்மனை வழிபட்டனர். பெண்களுக்கு சுமங்கலி பாக்கியம் நீடிக்கவும், குடும்பத்தினர் நீண்ட ஆயுள் பெறவும் ஐப்பசி மாத சதுர்த்தசி திதியில் கேதார கவுரி விரதம் இருந்து வழிபடுவது வழக்கம். இதனையொட்டி பெண்கள், நிறைந்த அமாவாசையில் மஞ்சள், குங்குமம் உள்ளிட்ட பூஜைப் பொருட்களை புதுப்பாத்திரத்தில் வைத்து கீழத் தெரு மாரியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை செய்தனர். கேதார கவுரி விரதத்தையொட்டி, மேலவீதியில் பூஜை பொருட்கள் வாங்க மக்கள் குவிந்தனர். இதனால் கடைகளில் மஞ்சள், குங்குமம், நோன்புக்கயிறு, காதோலை கருகமணி போன்ற பூஜை பொருட்களின் விற்பனை ஜோராக இருந்தது. பெண்கள் நோன்பு பொருட்கள் வாங்க மேலவீதி யில் குவிந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து போலீசார் போக்குவரத்தை மாற்றம் செய்து வேறு வழியில் அனுப்பி வைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !