உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தை மகளை வரவேற்றிட சூலூர் கோவில்களில் சிறப்பு பூஜை

தை மகளை வரவேற்றிட சூலூர் கோவில்களில் சிறப்பு பூஜை

சூலூர்; தை மாதப்பிறப்பை ஒட்டி, சூலூர் வட்டார கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன.


தை மாதப்பிறப்பை ஒட்டி சூலூர் வட்டாரத்தில் உள்ள சிவன் கோவில்கள், பெருமாள் கோவில்கள், முருகன் கோவில்கள் மற்றும் கிராம தேவதைகள் அருள்பாலிக்கும் கோவில்களில் நேற்று அதிகாலை சிறப்பு அபிஷேகம் நடந்தது. அலங்கார பூஜைக்கு பின் சிறப்பு அலங்காரத்தில், பக்தர்களுக்கு சுவாமி அருள் பாலித்தார். கோவில்களில் வீடுகளில் பக்தர்கள் சூரிய பொங்கல் வைத்து வழிபட்டனர். தை மகளை வரவேற்கும் விதமாக பெண்கள் பொங்கல் வைத்து இறைவனுக்கு படைத்து வழிபட்டனர். எம்.பாப்பம்பட்டி கரிய காளியம்மன் கோவிலில் நடந்தது. சுற்றுவட்டாரத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !