பெருமாள் கோவிலில் கேதார கவுரி வழிபாடு
ADDED :4396 days ago
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி பெருமாள் கோவிலில் பெண்கள் கேதார கவுரி விரதமிருந்து பெண்கள் பூஜை செய்தனர். கள்ளக்குறிச்சி புண்டரீகவல்லி தாயார் சமேத தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோவலில் நேற்று பெண்கள் சுமங்கலி பூஜை செய்தனர். தீபாவளி அமாவாசையையொட்டி பெருமாளுக்கும், தாயாருக்கும் சிறப்பு பூஜைகள் நடந்தன. அதன்பின் ஆண்டாள் மண்டபத்தில் கலசத்தில் கவுரி தேவதையை ஆவாஹனம் செய்து வழிபாடு நடந்தது. அதிகளவில் பெண்கள் நோன்பு எடுத்துக் கொண்டனர். தீர்க்க சுமங்கலி பாக்யம் வேண்டி பெண்கள் மஞ்சள் கயிற்றில் பூஜை செய்து, வீட்டிற்கு எடுத்து சென்றனர். காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை நடந்த இவ்வழிபாட்டில் ஆயிரத்திற்கும் அதிகமான சுமங்கலிப் பெண்கள் கலந்து கொண்டனர்.