உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கார்த்திகை தீப விழா ஏற்பாடுகள் தீவிரம்

கார்த்திகை தீப விழா ஏற்பாடுகள் தீவிரம்

திண்டிவனம்: பெருமுக்கல் முக்தியாஜல ஈஸ்வரர் கோவிலில் தீப திருவிழா ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.திண்டிவனம் -மரக்காணம் ரோட்டில் உள்ள பெரு முக்கலில் சஞ்சீவி மலை மீது ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த ஞானாம்பிகை சமேத முக்தி யாஜல ஈஸ்வரர் கோவிலில்உள்ளது. இங்கு வரும் 17 ம் தேதி மாலை 6 மணிக்கு, 1008 லிட்டர் நெய் கொண்டு மகா கார்த்திகை தீபம் ஏற்றி சிறப்பு வழிபாடு நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இதற்காக 7 அடி உயர செப்பு கொப்பரை மலையில் இருந்து இறக்கி வரப்பட்டு திண்டிவனத்தில் பழுது நீக்கும் பணி நடந்தது. விழா ஏற்பாடுகளை கிராம பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் செய்து வருகிறார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !