மாரியம்மன் கோவிலில் அபிஷேக யாக பூஜை
தர்மபுரி: தர்மபுரி கலெக்டர் அலுவலகம் அருகில் உள்ள கருவூல காலனி, லெனின் நகர் மஹா மாரியம்மன் கோவில் வருடாபிஷேக யாக பூஜை இன்று நடக்கிறது. இதையொட்டி, இன்று காலை, 8 மணி முதல், 11 மணி வரை, 108 கலச யாக பூஜையும், பகல், 12 மணிக்கு மேல் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜைகளும், தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. மாலை, 6 மணிக்கு திருவிளக்கு பூஜை நடக்கிறது. அம்மனுக்கு அபிஷேகத்துக்கு தேவையான பால் உள்ளிட்ட அபிஷேக பொருட்கள், ஹோம சாமான்கள், ஹோம குச்சி, பழ வகைகள் வழங்க விரும்பும் பக்தர்கள் இன்று காலை, 9 மணிக்கள் கோவிலில் வழங்கிட விழா குழுவினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இன்று ஒரு நாள் மட்டும் கோவில் வளாகத்தில், காலை, 6 மணி முதல் இரவு, 9 மணி வரை பிரசன்ன பட்டாச்சாரியாரின் அலங்காரத்தில் திருமலை திருப்பதி வெங்கடாஜலபதி அலங்காரத்தில் ஸ்வாமி எழுந்தருவி அருள் பாலிக்கிறார். பாலசுப்பிரமணிய சிவாச்சாரியார் வருடாபிஷேக சர்வசாதகத்தை முன்னின்று நடத்துகிறார். அதியமான்கோட்டை கால பைரவர் கோவில், குருக்கள் கிருபாகரன் மற்றும் மணிகண்டன் ஆகியோர் யாகசாலை பூஜைகளை செய்கின்றனர். பக்தர்களுக்கு இளைஞர் நற்பணி மன்றம் சார்பில் அன்னதானம் வழங்கப்படுகிறது.